கைக்காசை செலவழித்தவர் ஒருவர்… நோகாமல் பெயர் வாங்குபவர் இன்னொருவர்!!
நார்வே தமிழ் திரைப்பட விழா பற்றிய செய்திகளைப் படித்திருப்பீர்கள்… இந்த விழாவை தன் விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரும் பணம் செலவு செய்து ஏற்பாடு பண்ணவர் வசீகரன். காதல் கடிதம், காதல் வானம் என அருமையான ஆல்பங்களை இசையமைப்பாளர் விஎஸ் உதயாவுடன் இணைந்து உருவாக்கியவர்.
தமிழகத்திலிருந்து 13 புதிய திரைப்படங்களை இந்த போட்டிக்கென்று வரவழைத்தார். கூடவே தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குநர்கள் மிஷ்கின், சசிகுமார், ஜனநாதன், சமுத்திரக்கனி போன்ற சிறந்த இயக்குநர்களையும் வரவழைத்து சிறப்பித்தார். நார்வேயில் உள்ள தமிழ்ச் சமூகத்துக்கு இந்த இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் இங்குள்ள தமிழ் மீடியாவோ, நடந்தது என்ன, யார் இந்த விழாவுக்கு காரணம் என்று கூட கேள்வி எழுப்பாமல், மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன் பெயரை பிரதானமாகப் போட்டு, ஏதோ இவர்தான் இந்த விழாவையே ஏற்பாடு செய்த மாதிரி ‘சீன் க்ரியேட்’ பண்ணிவிட்டன. தனஞ்செயன் செய்ததெல்லாம், இந்த இயக்குநர்களுடன் வசீகரனுக்கு தொடர்பை ஏற்படுத்தித் தந்தது மட்டுமே.
குத்துவிளக்கேற்றுபவர்தான் வசீகரன் சிவலிங்கம். விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் உரிமையாளர்
இத்தனைக்கும் திரைவிழா குறித்து தனி பிரஸ்மீட் ஏற்பாடு செய்து செய்திகள் புகைப்படங்களை வழங்கியிருந்தார் வசீகரன். ஆனால் தனஞ்செயனோ, விழா குறித்த புகைப்படங்களை வசீகரனிடம் வாங்கி, அதை இவரே ஏற்பாடு செய்து தந்ததைப் போல அனைத்து நிருபர்களுக்கும் தன் பெயரில் அனுப்பிவிட, சிஃபி போன்ற தளங்கள் Hats off Danajayan! என்றெல்லாம் இஷ்டத்துக்கும் அடித்துவிட்டன.
பல ஆயிரம் யூரோ செலவு செய்து இந்த விழாவை நார்வேயில் நடத்திய வசீகரன் நொந்தே போனார்!
தான் ஒரு தயாரிப்பாளர்… பிஆர்ஓ அல்ல என்பதை தனஞ்செயன் எப்போதுதான் புரிந்து கொள்வாரோ!