Goa Movie Review
Banner: Ocher Studios
Cast: Premji, Jai, Vaibhav, Arvind Aakash, Sneha
Direction: Venkat Prabhu
Production: Soundarya Rajinikanth
Music: Yuvan Shankar Raja
கோவா திரைவிமர்சனம்
கட்டுப்பாடுகள் நிறைந்து இருக்கும் கிராமத்தில் வாழும் மூன்று இளைஞர்கள். வய்பவ், ஜெய், ஊர் மக்கள் தெய்வக்குழந்தையாக கருதும் பிரேம்ஜி, ஆகிய மூவரும் கிராமத்து கட்டுப்பாட்டை அடிக்கடி மீறுகிறார்கள். இதற்கிடையில் கிராமத்தை விட்டு ஒரு வாரம் எங்கயாவது போய் விட வேண்டும் என்று நினைத்து. மதுரையில் உள்ள தங்களின் நண்பனிடம் போகிறார்கள்.
மதுரையில் உள்ள நண்பனுக்கும், வெளிநாட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் முடிந்ததும் “இனி நான் லண்டனில் தான் வாழப்போகிறேன்” என்று நண்பன்ச் சொல்ல, அதைக்கேட்ட மூவரும் நாமும் இதுபோல வெளிநாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக மூவரும் கோவா செல்கிறார்கள். கோவாவில் என்ன நடக்கிறது என்பதுதான் படமும் அதன் முடிவும்.
தமிழ்நாட்டு பண்ணைபுரத்தில் தொடங்கும் படம். சரவெடி வெடித்ததுப் போல் கலகலப்பாக போகிறது. ஆனால் கோவாவிற்கு நகரும் படமோ சில இடங்களில் ஊசிப்போன பட்டாசுப்போல நகர்கிறது. ஏற்கனவே வெளியான தமிழ் படங்களில் இடம்பெறும் சில காட்சிகளைப் பயன்படுத்தி ‘கோவா’ படத்தின் காட்சியை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். தனது இரண்டு படங்களிலும் கதை கருவை, கண்ணும் கருத்துமாக கையாண்ட வெங்கட் பிரபு, கோவாவில் அதை கோட்டை விட்டு விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது படத்தின் இரண்டாம் பகுதி.
பிரேம்ஜி எப்போதும் போல இந்த படத்திலும் தனது கைஜால ஸ்டைலைப் பயன்படுத்தியுள்ளார். “கண்கள் இரண்டால்” பாடலை பயன்படுத்தி வெளிநாட்டுப் பெண்ணை காதலிக்கும் காட்சிகள், விஜய்யின் வேட்டைக்காரன் பாடல் பின்னணியில் இவர் போடும் சண்டையும், பாபா ரஜினியை கிண்டல் அடிப்பதும் ரசிக்கும் வைக்கும் காட்சிகள். ஜெய், பியா ஜோடிகளுக்கு ஒரு பாடல், கொஞ்சம் ஊடல், கொஞ்சம் காதல். அமெரிக்காவை ஆங்கிலத்தில் எழுத தெரியாத ஜெய் ,ஆங்கிலத்தில் பேசுவதும், கோவாவைப் பற்றி தன் நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பதும் என சிரிப்பு ஆரவாரம் செய்து கைதட்டல் பெறுகிறார்.
பணக்கார பெண்ணாக வரும் சினேகா, உடைகளில் புதுமை காட்டியுள்ளார். ஆண்களை அடக்கி ஆளும் மனம் படைத்த இவரிடம் மாட்டிக்கொள்ளும் வைபவ், படும்பாடு ரசிக்க வைக்கிறது. சம்பத்-ஆகாஷ் அரவிந்த் ஜோடிகளின் எக்குதப்பான உறவை (ஆண் நண்பன்) முதன் முறையாக தமிழ் சினிமாவில் காண்பித்து ஒரு தேவையில்லாத வேலையை செய்துள்ளார் இயக்குனர்.
சம்பத்தின் கதாபாத்திரம் ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நடிப்பிலும் பிண்ணி எடுத்துள்ளார் சம்பத். ஆனந்தராஜ், சண்முகசுந்தரம், சந்திரசேகர் என ஒரு பெரிய நடிகர்களின் பட்டாளத்தை வைத்துக்கொண்டு நையாண்டி செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.பிரசன்னா, சிம்பு, நயன்தாரா ஆகியோர் ஒரு கட்சியில் வந்து போகிறார்கள்.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்தை வேறு பரிமாணத்தில் காட்டியுள்ளது. யுவனின் இசையில் ‘கோவா….’ தீம் மியூசிக் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. வெங்கட் பிரபு சொன்னது போல் படத்துல கதையே இல்ல.ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த இந்த ‘கோவா’ கொஞ்சம் ஏமாற்றம் அளித்தாலும் ஒரு முறை பார்க்கலாம்.
Rating : 4/10
Popularity: 8% [?]
I think Kalyan is deaf and blind… That’s why he likes this movie
Enna koduma sir indha padam…
superb moive
venkat sir its reallly super movie rombha nallaeruku nala entratiment adum unga thambi prem super andha 2.45 hours eangala marandhu rasichom eangalukae goa poganum asaiya eruku sir papdam parthadula erundhu sampth congaraluation. thanku all guys
total waste…… i lost my $
yana kodoma sir ethu
Goa waste………….sorry venket prabhu
Good Movie