Cast: Siva, Disha Pandey, M S Baskar, Vennira Aadai Moorthy, Manobala
Direction: C S Amudhan
Production: Dayanidhi Alagiri
Music: Kannan
தமிழ்ப்படம் திரைவிமர்சனம்
ஒரு ஹிட்டான படத்தை கிண்டலும், கேலியும் செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை பல டிவி சேனல்களில் பார்த்திருக்கிறோம்.இப்படி பல ஹிட்டான தமிழ்படங்களை கிண்டல் செய்து பெரிய திரையில் எடுக்கப்பட்ட படம்தான் “தமிழ்படம்”.
சினிமாக்காரன்பட்டி என்னும் கிராமத்தில் ஆண்பிள்ளைகள் பிறந்தவுடனேயே கள்ளிபால் கொடுத்து கொலை செய்யும்படி நாட்டாமை உத்தரவால், மீண்டும் பிள்ளையாய் பிறந்த சிவாவை கொல்ல ஆயா கள்ளிபாலை எடுக்க, அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது படம். அதன் பிறகு சிவா, வெ.ஆடை.மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா அடிக்கும் கூத்துகள் உங்கள் வயிற்றை பதம் பார்க்காமல் போகாது.
படத்தில் வரும் ஆரம்ப காட்சியாகட்டும், நீங்கள் பார்த்து ரசித்த பல படங்களின் ஹிட் காட்சியை இவர்கள் ஸ்பூப் செய்திருக்கும் முறையை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு ஒரு சின்ன லைனை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்திருக்கிறார்கள்.
அபூர்வ சகோதரர்கள் டெல்லிகணேஷ் காட்சி, சிவா பெரியவனாகும் சைக்கிள் காட்சி, ரன் படத்துக் காட்சி இப்படி சொல்லி கொண்டே போகலாம். முக்கியமாய் “இந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா” என்று போட்டுவிட்டு பின்னர் “இவ்வாறு போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்” எனும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.(அவங்கலாம் அஜித் ரசிகரா இருப்பங்களோ).
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும், கண்ணனின் பாடல்கலும் படத்திற்கு பலம்.அதிலும் அந்த ஓ..மகசீயா பாடல் அட்டகாசம்.முக்கியமாய் “லாலாக்கு டோல் டப்பிமா” என்ற வரி வரும் போது தியேட்டரே அதிர்கிறது.
சிவா மிக அழகாய் செட் ஆகிறார் இந்த படத்திற்கு. ஹீரோயினுக்கு தமிழ்பட வழக்கம் போல் டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார் . படத்தில் வரும் சின்ன, சின்ன கேரக்டர்கள் கூட நச் என்று செய்திருக்கிறார்கள். குறிப்பாய் தேவாவாக வரும் மம்மூட்டி சாயல் ஆளும், அவர் தவறுதலாய் போய் மன்னிப்பு கேட்கும் ரமணாவும், கூடவே வரும் நடிகர் பரத்வாஜும் படத்தை பாருங்கள் அட்டகாசம்.
படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு பத்து நிமிஷம் கொஞ்சம் மொக்கை போட்டாலும் மற்ற இடங்களில் அட்டகாசம் செய்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.அதிலும் என்னதான் ஸ்பூப் பண்ணினாலும், சில இடங்களில் காட்சிகளை முடிக்கும் வகையில் நச். முக்கியமாய் அந்த குடும்ப பாட்டு மேட்டர் , இப்படி பல விஷயஙக்ளை சொல்லிக் கொண்டே போகலாம். இனிமேல் ஏதாவது பெரிய ஹீரோ ஓப்பனிஞ் சாங் வைக்கவே யோசிப்பார்கள். அப்படி கலாய்த்திருக்கிறார்கள். குறிப்பாய் ஹீரோயின் எஸ்.ஜெ.சூர்யா, டி.ராஜேந்தர் ரசிகை என்பதும், பரதநாடிட்யதை கற்றுக் கொள்ள பாக்கியராஜின் நடன டிவிடியை ஓட விடுவதும்.. ஒரே பாட்டில் ஒரு காபி எடுத்து வருவதற்குள் பணக்காரனாவது, சிவாஜி ரஜினி சீன், அப்பப்பா. ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.சீன்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்ட் குறையும் என்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் காண்க.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சரத்குமார், பாக்யராஜ், சிம்பு போன்றவர்களின் படங்களை கிண்டல் அடித்தவர்கள் அஜித்தை விட்டு விட்டார்கள்.(அஜித்தை கிண்டல் அடிக்க மனமில்லையா அல்லது ஹிட்டான படங்கள் அஜித் கொடுக்கவில்லையா).
அங்கே ஒருவர் எடுக்கும் படம் எல்லாம் மொக்கை வாங்க, தயாநிதி அழகிரியின் முதல் தயாரிப்பே “ஹிட்”.
Rating: 6/10
Popularity: 9% [?]

I totally agree with Chandrasekaran Comments… Very true…
Hello pradeep sir, Even if you disagree, Vijay is a comedian. Hereafter he will not open the film with fight and song(also with dance master). “Good rewit” by Tamil padam team…. But the bitter thing is they have criticized Bhagyaraj also…What a drill master he is (in dancing)? No one will dance like him (even P.T master)….
ask ajith to do comedy in one film then u we well take about vijay k va..ask ajith to act in coimbatore tamil one film then we well see..how is comedy hero?ajith is copying film from hollywood vijay is doing this same think as remake so u ask ajith to act in full comedy film if he make that film hit means we well truely say vijay is a comedy hero..first ask ajith to speak in different way in film k va…for me ajith is always joker..but if we see the joker means comedy well not come stupid bad words only coming……are u ready to accept my challenge
“அஜித்தை கிண்டல் அடிக்க மனமில்லையா அல்லது ஹிட்டான படங்கள் அஜித் கொடுக்கவில்லையா”
It’s just because that Dayanidhi Azhagiri’s gonna produce Ajith’s next venture that too his 50th film!!! That’s y they left Ajith out of the game otherwise some close sources says that they(the film team) had plans of spoofing his films like “Red” and especially “Billa”!!!!!
super film. I like this type of film