Your are here: Home // News Home // Review // Vinnai Thandi Varuvaya – Review



Vinnai Thandi Varuvaya – Review

விண்ணைத் தாண்டி வருவாயா – திரைவிமர்சனம்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா

எடிட்டிங்: ஆன்டனி

இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்

தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ மூவீஸ்

காதல், பேசுவதல்ல… உணர்வது. தான் உணர்ந்த காதலை எளிமையான கவிதையாக சொல்ல முயன்றிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒரு மாலையில் கார்த்திக்கின் கண்களில் விழுகிறாள் ஜெஸ்ஸி. விழுந்தவளுக்கு எழுந்திருக்க மனமில்லை… விழுங்கியவனுக்கு விட்டுவிட மனசில்லை. காதல்!

பொலாரிஸில் பணியாற்றும் ஜெஸ்ஸியின் மலையாள கிறிஸ்தவமும், மெக்கானிக்கல் எஞ்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமாவைக் காதலிக்கும் கார்த்திக்கின் தமிழ் இந்து அடையாளங்களும் குறுக்கே மறித்தாலும், வயது வித்தியாசம் சின்ன வேகத் தடையாக குறுக்கிட்டாலும்… காதல் பூக்கிறது. அதானே காதல்…

பெற்றோரின் எதிர்ப்பு, ஜெஸ்ஸிக்கு வேறு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யும் வழக்கமான முடிவுக்குத் தள்ளுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை என ஜெஸ்ஸி கூற தடைபடுகிறது. காதலைக் காப்பாற்றிய ஜெஸ்ஸிக்கு தன்னையே அர்ப்பணிக்கத் தயாராகிறான் கார்த்திக்.

ஆனால் அவளோ புதிராய், குழப்பமாய், கவிதையாய், புயலாய், அப்போதே சாப்பிடத் துடிக்கும் இனிய பிசாசாய்… பிடிக்குள் அடங்காத அழகிய மீனாய் நெருங்கியும் விலகியும்… விலகியே போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பதுதான் கிளைமாக்ஸ். ஆனால் கொஞ்சம் செயற்கை கலந்த வித்தியாசத்துடன்!

இந்தப் படத்தின் நாயகன்… சத்தியமாய் ஏ ஆர் ரஹ்மான்தான். இசையை நீக்கிவிட்டு இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே!

முதல் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை, இசையும் காதலும் பின்னிப் பிணைந்து இதயத்தை ‘போட்டுத் தாக்குகின்றன!’.

“ஒருநாள் சிரித்தேன்… ஒரு நாள் வெறுத்தேன்… உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…” பாடல் உயிரை உலுக்குகிறது. கிட்டத்தட்ட ஜெஸ்ஸி பாத்திரத்தின் தன்மை இது. ஸ்ரேயா கோஷல் – ரஹ்மான் குரல்கள் என்னமோ செய்கிறது மனதை. இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் அன்புடைமை அதிகாரத்தின் குறள்களை ரஹ்மான் பயன்படுத்தியுள்ள விதம் சிலிர்க்க வைக்கிறது. தமிழை இப்படியும் வளர்க்கலாம்… ஹேட்ஸ் ஆஃப் ரஹ்மான்!

ஓமணப் பெண்ணே.. பாடலை படமாக்கிய விதமும், அதன் இடையிடையே வரும் ரயில் காட்சிகளும் பார்த்து மட்டுமே அனுபவிக்கக் கூடியவை.

நின்றுபோன திருமணத்துக்காக போட்ட அலங்கார விளக்குகள் மின்னும் ஒரு இரவில், சுவரேறிக் குதித்து ஜெஸ்ஸியை கார்த்திக் சந்திப்பதும், அந்த பின்னிரவுத் தனிமையில் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களும்… கவிதை. காதலில் விழுந்துதான் பார்ப்போமே என எல்லோரையும் தவிக்க வைக்கும் காட்சிகள்.

த்ரிஷாவின் பாத்திரப் படைப்பு சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ மதுமிதாவை நினைவூட்டுவதாய் இருந்தது. ஆனால் பெரும்பாலானோர் வாழ்க்கையில் மதுமிதாக்கள், ஜெஸ்ஸிகளே வருகிறார்கள்… போகிறார்கள். போனாலும் வாழ்கிறார்கள்!

த்ரிஷா சிறப்பாக நடித்திருந்தார். சில காட்சிகளில் முகம் பொலிவற்றுத் தெரிந்தாலும், ஜெஸ்ஸி என்ற பாத்திரத்தை பிரதிபலித்த வகையில் நூறு சதவிகிதம் சிறப்பான நடிப்பைக் காட்டியிருந்தார்.

இந்தப் படத்தில் சிம்புவைத் தவிர, நிஜமாகவே அடக்கமான ஒரு பையன் நடித்திருந்தால் படத்தை முழுமையாக ரசித்திருக்க முடியும். அவர் நல்ல பையனாக ‘நடிக்கிறார்’ என்ற உணர்வுதான் மிஞ்சியது. பல்லைக் கடித்தபடி அவர் பேசுவதும், எப்போதும் முகத்தை இறுகியபடி வைத்துக் கொள்வதும் மாறுபட்ட நடிப்போ, அடக்கி வாசிப்பதோ ஆகிவிடாது.

ஒளிப்பதிவாளர் – நண்பராக நடித்திருக்கும் கணேஷ் இயல்பாகச் செய்திருக்கிறார். கேஎஸ் ரவிக்குமார் சில காட்சிகளில் வருகிறார். கதையை அவர் வழியாகவும் நகர்த்திச் செல்வது ஒரு நல்ல உத்தி.

மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு நம்மையும் ஜெஸ்ஸியுடனே பயணிக்க வைக்கிறது. கேரளாவையும் அமெரிக்காவையும் அவரது கேமரா வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ள விதம் பிரமாதம்.

கௌதம் மேனனுக்கு சென்னை கெட்ட வார்த்தைகள் மீது அப்படியென்ன தீராக் காதலோ… அதான் தெருவெங்கும் மனிதர்கள் வாயில் கூவத்து வெள்ளமாய் வந்து விழுகிறதே… இதை சினிமாவிலும் வேறு பார்க்க வேண்டுமா…?

“கௌதம் மேனனா… தமிழ்ப் படத்தை இங்கிலீஷ்ல எடுப்பாரே அவரா!” என்று இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வதாய் நினைத்துக் கொண்டு, மீண்டும் அதே தவறைத்தான் செய்துள்ளார் இந்தப் படத்திலும். பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில், தமிங்கிலீஷில். மிச்சமிருக்கும் இடங்களில் மலையாள வசனங்கள். தமிழ் வசனங்கள்?

நான் இப்படித்தான் என்ற அவரது முரட்டுப் பிடிவாதத்தைக் காட்ட வேண்டுமானால் இது உதவும். ரசிகர்களுக்கு வெறுப்புதான் மிஞ்சும்.

அட, க்ளைமாக்ஸில் ஜெஸ்ஸி என்ற பேனர் கூட நண்டு நண்டாய் மலையாளத்தில் எழுதப்பட்டது போலவே தெரிகிறது… ஏன் இத்தனை வெறி?

கிளைமாக்ஸில் பார்வையாளர்களுக்கு ஒரு ஷாக் தருவதற்காக மட்டுமே அப்படியொரு திருப்பத்தை வலிந்து திணித்தது போன்ற உணர்வு. இது சென்னையைத் தாண்டி ரசிகர்களைச் சேருமா தெரியவில்லை. தியேட்டர் ஆபரேட்டர்கள் எனும் சூப்பர் எடிட்டர்களால் கத்தரித்து வீசக்கூடிய வாய்ப்பும் உண்டு!

நான் ஏன் ஜெஸ்ஸியைக் காதலித்தேன்..?

நீ ஏன் கார்த்தி என்னைக் காதலிச்சே?

நீ ஏண்டா அந்தப் பொண்ணை காதலிச்சே?

-இப்படி படம் முழுக்க  யாராவது ஒருவர் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே உள்ளனர். இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் இழுவை.

ஆனால் இத்தனையையும் தாண்டி, படம் முடிந்து வெளியே வந்தபோது, ஏதோ ஒரு தாக்குதலில் பாதித்த வலியும் உணர்வும் மனதில் தளும்புவது நிஜம்தான்!

- Vino, Envazhi

Rating – 3/10

Related Posts with Thumbnails



13 Responses to “Vinnai Thandi Varuvaya – Review”

  1. sinu says:

    song is very good, but very slow movie

  2. travancore_n_t says:

    a beautiful movie – so poetic and romantic thanx to rahman and goutham-mile stone for simbu- proves- a kerala christian girl is not for a lasting relationship. not even one vulgar or glamour scene still trisha is awesome.
    simbu after a long time in a realistic next door boy character.
    just loved it – the croud here in kerala just loves the movie

  3. vijay says:

    Slow movie only 30 days….then?

  4. ashok says:

    Good story but bad film

  5. alen says:

    padama allathu nadakama waste movir gowtham

  6. harish soriyan says:

    Ithu english padama illa hindi padama? yethuvume puriyala

  7. Vishak says:

    Flop movie but a definite hit

  8. Praveen,Prabhu says:

    SUper Hit movie

  9. karthik says:

    this rating is not good..!! my rating is 8/10…!! really good one..!! dont miss it..!!

  10. Annamalai says:

    An all new Simz, wth a complete make over steals d show. An amazing performance. VTV is a definite milestone for him…

    dis review is nt gd..

  11. madhan says:

    waste padama

  12. madhan says:

    pondamona padamala ethu Oorakam varuthu pokatha padam gowtham vaindam waste move

  13. Selva says:

    Good Movie…

Leave a Reply




themes free
Copyright © 2009 CInesnacks.in . All rights reserved.
Powered by WordPress.